ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் அமலாக்க துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில், ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஆலம்கிர் ஆலமின் உதவியாளரான சஞ்சீவ் லாலின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் 30 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவத்தில் ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே.ராமுவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில், வீரேந்திர கே.ராமுவுக்கு கீழ் பணிபுரியும் ஒருவரிடமிருந்து ஒரு பெரிய தொகை மீட்கப்பட்டது. பின்னர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை ED விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சில திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் வீரேந்திர கே. ராமை ED பிப்ரவரி 2023 இல் கைது செய்தது. குறிப்பிடத்தக்கது.