பயணசீட்டு இருந்தும் அபராதமா ? அரசு அதிகாரிகளின் அட்ராசிட்டி !

பயணசீட்டு இருந்தும் அபராதமா ? அரசு அதிகாரிகளின் அட்ராசிட்டி !

Share it if you like it

காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்து ஒன்றில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கலைமணி என்பவர் தன் கணவன் மற்றும் மாமியாருடன் உளுந்தூர்பேட்டைக்கு டிக்கெட் எடுத்து பேருந்தில் பயணித்துள்ளனர். உளுந்துர்பேட்டை பேருந்து நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் கலைமணியிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது பைகளில் தேடி பார்த்துள்ளார். அப்போது டிக்கெட் அவருக்கு கிடைக்கவில்லை. அவருக்கு நேரம் கூட கொடுக்காமல் உடனடியாக டிக்கெட் பரிசோதகர் மூன்று பேருக்கும் தலா 500 ரூபாய் வழங்க வேண்டுமென்று அவரிடம் பலவந்தமாக வாங்கி கொண்டார். இதனிடையே கலைமணியின் டிக்கெட் கிடைத்துவிட்டது. அந்த டிக்கெட்டை காண்பித்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார் கலைமணி. ஆனால் டிக்கெட் பரிசோதகரோ பணத்தை திரும்ப கொடுக்காமல் மறுத்துள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த மற்ற பயணிகள் கலைமணிக்கு ஆதரவாக குறைக்க கொடுக்க அப்பொழுதான் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில், பயணங்களில் பையில் வைத்த சீட்டை தேடும் போது கிடைக்காது போவது சகஜம் தான். மேலும், நடத்துனரிடம் எவ்வளவு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன, எவ்வளவு பேர் வாகனத்தில் உள்ளார்கள் என்ற எண்ணிக்கையை வெளியூர் பேருந்துகளில் கணக்கிடுவது சுலபமே. அதை அடிப்படையாக கொண்டே அந்த பயணி பணம் செலுத்தி சீட்டை பெற்று கொண்டாரா என்பதை பரிசோதகர் அறிந்து கொண்டிருக்கலாம். பரிசோதகர் கேட்கும் போது சீட்டு இருக்க வேண்டும் என்பதை விட, அந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு சீட்டை பெற்றாரா இல்லையா என்பதை ஆய்வு செய்வதே சரியான பணி. இந்த விவகாரத்தில் சீட்டை காண்பித்தும் பணத்தை திருப்பிக்கொடுக்காமல் இருந்தது அலட்சியம் மட்டுமல்ல அராஜகமும் கூட. இந்த பரிசோதகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *