நரிக்குறவர் மாணவர் சாதனை ; காடு இருந்தா எடுத்துக்கிடுவாங்க, ரூவா இருந்தா புடுங்கிகிடுவாங்க, படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்க முடியாது !

நரிக்குறவர் மாணவர் சாதனை ; காடு இருந்தா எடுத்துக்கிடுவாங்க, ரூவா இருந்தா புடுங்கிகிடுவாங்க, படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்க முடியாது !

Share it if you like it

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியது. இது கடந்த ஆண்டை விட சதவீதம் அதிகமாகும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி 414 மதிப்பெண்களும், தனுஷ் 412 மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நரிக்குறவர் இன மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர்களும், பொதுமக்களும் 2 மாணவர்களுக்கும் சால்வை அணிவித்தும், இனிப்புகளை ஊட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *