விடுமுறை எடுத்து தாய்லாந்து செல்லும் ராகுல் : தீபாவளிக்கு கூட விடுப்பு எடுக்காமல் ராணுவ வீரர்களுடன் மோடி !

விடுமுறை எடுத்து தாய்லாந்து செல்லும் ராகுல் : தீபாவளிக்கு கூட விடுப்பு எடுக்காமல் ராணுவ வீரர்களுடன் மோடி !

Share it if you like it

இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் செவெல்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: தெலுங்கானா மாநிலத்தை காங்கிரசால் ஒருபோதும் வளர்ச்சி அடைய வைக்க முடியாது. காங்கிரசும், பாரத் ராஷ்ட்ர சமிதியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இரு கட்சிகளும் தெலுங்கானா மக்களின் பணத்தை கொள்ளையடித்து, தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்டுள்ளன. இன்று தெலுங்கானா வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலமாக உள்ளது.

இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை. நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு பக்கம். ராகுல் தலைமையில் இண்டியா அணி மற்றொரு பக்கம். நாட்டில் வெப்பம் அதிகமாகிவிட்டால், விடுமுறைக்காக ராகுல் தாய்லாந்து செல்கிறார். தீபாவளிக்குக்கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் நமது ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடி மகிழ்கிறார்.

23 ஆண்டு கால நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியல் வாழ்க்கையை பிரதமர் மோடி கழித்துள்ளார். பல தசாப்தங்களாக சட்டப்பிரிவு 370ஐ அப்படியே வைத்திருந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமா? பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பயப்படும் ஒருவர் பிரதமராக வேண்டுமா? பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கத் தெரிந்த ஒருவர் (நரேந்திர மோடி) பிரதமராக இருக்க வேண்டுமா?. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *