கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலம் குறித்து இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட அடல் சேது பாலம் பற்றி பேசினார். இது பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது, இதைப் பயன்படுத்தியவர்கள் மக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் நிற்காமல் மிகவும் சுலபமாக நாம் நினைத்த இடத்திற்கு செல்ல முடிகிறது. மக்கள் இதனை இது ஒரு வரப்பிரசாதமாக உணர்கிறார்கள்.
மும்பை – நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது ‘அடல் சேது’ பாலம். இதன் மூலம் இரண்டு மணி நேர பயணம் இருபது நிமிட பயணமாக மாறியுள்ளது. இது சாத்தியம் என நாம் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா?
இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளால்தான் எளிதில் நம்மால் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது எனக்கு பெருமை அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்டுள்ள வளர்ச்சியைப் பாருங்கள். இது அற்புதமானது. உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது.
இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா ஸ்மார்ட்டான நாடு. இளம் பாரதியர்கள் வாக்களிக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது. அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள் என மக்கள் நம்புகிறார்கள். இந்த வளர்ச்சி இதோடு நிற்கக்கூடாது. வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்” என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியர்களுக்கு தெரியும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தெரியும் என்றும், இந்த மக்களவைத் தேர்தலில் இந்தியர்கள் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இளம் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மிகவும் புத்திசாலி நாடு, அதில் நான் பெருமைப்படுகிறேன். தற்போது நமது நாடு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் நமது நாடு வளர்ச்சி அடைவதற்கு விகாஸ் மற்றும் வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்” என்றார் ராஷ்மிகா.