பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிட போகிறார். இதனால் வாரணாசி உட்பட 57 தொகுதிகளுக்கு ஜூன் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. வாராணசியில் ஏற்கெனவே 2014, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது 3-வது முறையாக அவர் அதே தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
மே 14-ம் தேதி கங்கா சப்தமி தினமாகும். இந்த தினம் இந்துக்களை பொறுத்தமட்டில் மிகச்சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. கங்கா சப்தமி தினத்தில் கங்கை நதி நேரடியாக பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. அதனால்தான் இந்த நாளைத் தேர்வு செய்து பிரதமர் மோடி மனு தாக்கல் செய்தார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவரான அய்யாக்கண்ணு போட்டியிட போவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியினை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், “தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறீர்கள், வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள் ? வாரணாசி மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அய்யாக்கண்ணு வக்கீல், என்ன விளக்கம் அளிக்க வேண்டும் என்பது தெரியாமல் திருதிருவென முழிக்க நீதிபதி கேட்டதற்கு பதில் அளிக்க வேண்டும் எதையாவது சொல்லலாம் என்று “தனது கட்சிக்காரருக்கு 79 வயதாகிறது, ஒரு காரணத்திற்காக வாரணாசியில் போட்டியிட விரும்புகிறார்” என்று கூறினார்.
இதனை அடுத்து நீதிபதியான விக்ரம் நாத் மற்றும் சதிஷ் சந்திர சர்மா ஆகியோர் இந்த மனுவின் முழு நோக்கமும் விளம்பரத்துக்காக தான் செய்யப்பட்டுள்ளது என்று கூறி அய்யாக்கண்ணுவின் வழக்கை தள்ளுபடி செய்தார்.