திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பிரம்மபுரீஸ்வரர் என்கிற மிகவும் பழமையான கோயில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் இருந்த செப்பு தகடு ஒன்று திருட்டுபோனது. இந்த செப்பு தகடானது மாமன்னர் சுந்தர சோழன் இக்கோவிலுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2023 ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் செப்பு தகடு குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது செப்பு தகடு வைத்திருப்பவர்கள் தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படுமென்றும் சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் நேற்று திடீரென ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்று, செப்பு தகடு மாயமானது குறித்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். செப்புத் தகடு மாயமானது குறித்து சிலை தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.