உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத் என்கிற அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த இந்துப் பெண்ணை இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் தன்னை ஹிந்துவாக பெயரை மாற்றி நடித்து ஹிந்து பெண்ணிடம் பழகி காதல் வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் ஒருநாள் அந்த பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தன்னுடைய காதலன் ஒரு முஸ்லீம் என்று அப்பெண் அறிந்து கொள்கிறார். இதனால் அப்பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த பெண்ணை தர்காவுக்கு அழைத்து சென்று இஸ்லாத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தி மதமாற்றி உள்ளார். பின்னர் அந்த பெண்ணை மூளை சலவை செய்து வற்புத்தி திருமணம் (நிக்கா) செய்து கொள்கிறார். நிக்காவின்போது அந்த பெண்ணை மாட்டிறைச்சியை சாப்பிடுமாறு வற்புறுத்தி உள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தன்னை அடித்து துன்புறுத்தியதாக அந்த பெண் கூறினார். மேலும் அவர் கர்ப்பமாக இருந்தபோது குழந்தையை கருக்கலைப்பு செய்ய சொல்லி கட்டாய படுத்தியுள்ளார். ஒரு நாள் தன்னுடைய கணவரின் சகோதரன் அனுமதி இல்லாமல் அவளது அறைக்குள் நுழைந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்தான். இதைப்பற்றி கணவரிடம் கூறியபோது, வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு மிரட்டி, யாரிடமாவது தெரிவித்தால், பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் என எச்சரித்து அவளைத் கடுமையாக தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தை நாடியுள்ளார், ஆனால் காவலர்கள் தான் சொல்வதைக் கேட்காமல் விரட்டியடித்ததாகவும், எனவே எஸ்எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய எஸ்எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.