சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டு உளளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும். விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என, கோடநாடு ஊராட்சிமன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.இதனை விசாரித்த நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி வழங்கியது. மேலும், ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளது.