ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு, மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில், 2 நாள் அரசு முறை பயணமாக இன்று (ஜூலை 08) பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அவருக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். ரஷ்ய அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கை கொடுத்து அன்பை பரிமாறி கொண்டனர்.
இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பங்கேற்கிறார். நாளை (ஜூலை 9) ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இருநாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார். ரஷ்யாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அவர் நாளை ஆஸ்திரியாவுக்கு செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றதை புலம்பெயர்ந்த இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக புலம்பெயர்ந்த இந்தியர் ஒருவர் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரதமர் மோடி இங்கே மாஸ்கோவில் இருக்கிறார் என்பதில் எனது உற்சாகத்தை வெளிப்படுத்த அளவே இல்லை” என்று பிரதமர் மோடியை வரவேற்க மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு வெளியே வந்த புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர் ஒருவர் தேசிய கொடியை வைத்துக்கொண்டு கூறுகிறார்.