சட்னியில் பல்லி : 8 பேருக்கு வாந்தி மயக்கம் : உணவு பாதுகாப்பு துறை என்ன செய்கிறது ?

சட்னியில் பல்லி : 8 பேருக்கு வாந்தி மயக்கம் : உணவு பாதுகாப்பு துறை என்ன செய்கிறது ?

Share it if you like it

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பத்தாப்பேட்டை பகுதியில் சுப்பிரமணி என்பவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சுப்பிரமணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, அவரது உறவினர்கள் நேற்று பத்தாப்பேட்டைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு உணவளிக்க, சுப்பிரமணியின் குடும்பத்தார் (சுபாஷ் என்பவர்) மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இட்லி வாங்கி வந்துள்ளனர்.

அதை சாப்பிட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 3 குழந்தை உட்பட 8 பேர் அந்த இட்லியை சட்னியுடன் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில், முதலில் ஒரு குழந்தைக்கு மட்டும் வாந்தி வந்துள்ளது. உடனடியாக சுபாஷ் தான் வாங்கிவந்த இட்லியை பார்க்கவே, அதில் சட்னியில் பல்லி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக 3 குழந்தைகள் உட்பட 8 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமேலும் உணவகத்தில் வைக்கப்பட்ட சட்னியில் பல்லி இருந்ததாக சுபாஷின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *