சீருடை, காலணிகள் வழங்காததால் மாணவர்கள் அவதி : அன்பில் மகேஷ் எங்கே ?

சீருடை, காலணிகள் வழங்காததால் மாணவர்கள் அவதி : அன்பில் மகேஷ் எங்கே ?

Share it if you like it

தமிழக பள்ளிக் கல்வித் துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், மற்றும் சீருடைகள், கணித உபகரணப் பொருட்கள் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்ததும் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆனால், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதமாகிவிட்ட சூழலில், இதுவரை சீருடைகள், காலணி போன்ற பொருட்கள் வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது :- தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 4 செட் சீருடைகள் வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டதும் 2 வாரத்துக்குள் மாணவர்களுக்கு தலா 2 செட் சீருடை தரப்படும். தொடர்ந்து புத்தகப் பை, காலணி, கணித உபகரணப் பெட்டி போன்ற இதர பொருட்கள் படிப்படியாக விநியோகம் செய்யப்படும்.

ஆனால், இந்தாண்டு பாடநூல்கள், நோட்டுகள், மட்டுமே இதுவரை அளிக்கப்பட்டுள்ளன. மற்ற பொருட்களின் நிலை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அரசின் இலவச பொருட்களின் தரம் ஓராண்டுக்கு மேல் நீடிக்காது. இதனால் மாணவர்கள் சொந்த செலவில் சீருடைகள், புத்தகப் பை, காலணிகள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நலத்திட்டப் பொருட்களை தமிழக அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

சமீப காலமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை குறித்து செய்திகள் அவர் வெளியிட்ட அறிக்கைகள் என்று எதுவுமே காணவில்லை. ஒருவேளை சுற்றுலா பயணத்திற்காக வெளிநாடு சென்றுவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்ற செய்திகளை நாம் ஊடங்கங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பார்த்திருப்போம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கை எடுக்காமல், பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணி வழங்காததை குறித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *