விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் : அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் !

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் : அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் !

Share it if you like it

மதமாற்ற தடைச் சட்டம் பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத நிலையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் அதிரடி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது.

அப்போது காமராஜர் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், பேரணியில் பங்கேற்றவர்கள் காந்திஜி சாலை வழியாக செல்ல முற்பட்டனர். அப்போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், விசிகவினருக்கும் மோதல் உருவாகியது. அதில், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மோகனவேல் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிவு 147, 148, 337, 307, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இதுதொடர்பாக, மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் ஆஜராகாத எம்.பி. திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *