காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் சுமார் 300 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் மழைநீரால் சூழ்ந்துள்ளது. பள்ளியில் வடிகால் இல்லாததால் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ மாணவிகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதற்கும், வகுப்பிலிருந்து கழிவறை செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதுமட்டும் அல்லாமல் தேங்கி நிற்கும் மழை நீரால் விஷ ஜந்துக்கள் பள்ளிக்கு வருவதோடு மழைநீரில் நடப்பதால் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் வரவும் அதிக வாய்ப்பிருக்கிறது. மழைநீர் பள்ளி முழுவதும் தேங்கி உள்ளதால் தலைமை ஆசிரியர் மட்டும் விடுமுறை எடுத்து கொள்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது : மழைநீர் இந்த மாறி தேங்கிருந்தால் எப்படி இது. இருக்குற இடத்தை கால்வாய் பண்ணி எடுத்து விடணும். இந்த மாறி இருந்தா எத்தனை குழந்தைகளுக்கு ஜுரம் வரும்.படிக்கிற ஸ்கூல் மாறியா இருக்கு இது. ஹெட் மாஸ்டர் மட்டும் வராம லீவ் எடுத்துப்பாங்க. எங்க பசங்க மட்டும் ஸ்கூல்ல இருக்கணுமா ? படிக்கிற குழந்தைங்க ஜுரம் வந்து அங்கங்க எத்தனை குழந்தைங்க சாகுது. எப்படி எல்லாமோ வியாதி பரவுது. ஸ்கூல் பாத்ரூம் ரொம்ப மட்டமா இருக்கு. நீங்க இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க.இல்லனா எங்க குழந்தைங்கள ஸ்கூலுக்கு அனுப்பமாட்டோம். இவ்வாறு மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் ஆதங்கமாக பேசினர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக தான் உள்ளது. அரசு பள்ளிகளை தரம் உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் கார் ரேஸ் நடத்த திட்டமிடுகின்றனர். தற்போது உதயநிதி ஸ்டாலின் ஒலிம்பிக் போட்டியை ரசிப்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ளதை சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்..