சுதந்திர தினம் இம்மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும் போது மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று ஒருமித்தமாக வணக்கத்தை சொல்வது வழக்கம். இப்படி இருக்கையில், இனி வரும் நாட்களில் இந்த குட் மார்னிங்குக்கு பதில் ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என்று ஹரியானா பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே தேசபக்தி மற்றும் தாய் நாடு குறித்த பெருமிதத்தை ஏற்படுத்தும் வகையில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களிடையே தேசிய அடையாளத்தின் வலுவான உணர்வை வளர்ப்பதற்கும், தேசிய ஒற்றுமை, தேசபக்தி மற்றும் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை மதிக்க கற்று கொடுப்பதற்கும் ‘ஜெய்ஹிந்த்’ முழக்கம் உதவியாக இருக்கும். இந்த முயற்சி, தேசபக்தியையும், தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் மாணவர்களை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதே போன்று தமிழகத்திலும் பள்ளி கல்விதுறை மாற்றத்தை கொண்டு வரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.