போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விசிக பிரமுகர் முகமது சலீம் அதிரடி கைது !

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விசிக பிரமுகர் முகமது சலீம் அதிரடி கைது !

Share it if you like it

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்ததை தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கை அமலாக்கத்துறை கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆகஸ்ட் 13ம் தேதி (நேற்று) ஆஜரானார். விசாரணையில் நீண்ட விசாரணைக்குப் பிறகு முகமது சலீமை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. கைதான சலீமை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், “போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை போலி நிறுவனங்கள் தொடங்கி, அதில் முதலீடு செய்துள்ளதாகவும் ,அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன,” எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில், சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு அதன் மூலம் லாபம் ஈட்டியதற்காக இன்று அவரது சகோதரரும் விசிக நிர்வாகியுமான முகமது சலீம் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில், 70 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை கடத்தியதாக திமுக பிரமுகர் இப்ராகிம் என்சிபியால் கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இவை கவுரவச் சின்னங்கள் அல்ல, அரசுக்கு அவமானம் என்பதை உணர வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *