ஹிந்து கடவுள்களை புறக்கணிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் !

ஹிந்து கடவுள்களை புறக்கணிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் !

Share it if you like it

கோகுலாஷ்டமி என்கிற கிருஷ்ண ஜெயந்தி ஹிந்து பண்டிகை நேற்று நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருஷ்ணர் சிலைகள், பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனையானது. மக்கள் தங்கள் வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்ந்தனர்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து கூறினர். தொடர்ந்து காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியும் எக்ஸ் பதிவில் வாழ்த்து கூறினார். அதில் தான் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது. வாழ்த்து தெரிவித்து அதன் கீழ் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கிருஷ்ணர் புகைப்படம் இல்லாமல் வெறும் மயிலிறகும், புல்லாங்குழலும் மட்டுமே இடம் பெற்றிருந்தது. அப்படியென்றால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹிந்து கடவுளை புறக்கணிக்கிறாரா என்று கேள்வி எழுகிறது.

இவ்வாறு ஹிந்துக்களின் பண்டிகைகளில் ஹிந்து கடவுள்களை ராகுல் காந்தி புறக்கணிப்பது இது முதல்முறை அல்ல. ஏனெனில் இதற்கு முன்னதாக ஹிந்துக்களின் பண்டிகையான விஜயதசமி என்று அழைக்கப்படுகிற தசரா பண்டிகை வந்தது. தசரா பண்டிகைக்கும் ராகுல் காந்தி வாழ்த்து சொன்னார். இந்தியாவில் தசரா பண்டிகை கொண்டாடப்படுவதற்கான முதன்மையான காரணம், அசுர மன்னன் ராவணனை ஸ்ரீ ராமர் வென்றதை நினைவுகூரும் வகையில் தான். ஆனால் அதிலும் தசரா கொண்டாடுவதற்கு காரணமான ஸ்ரீ ராமரின் புகைப்படத்தை விடுத்து வெறும் வில் அம்பு புகைப்படத்தை மட்டும் வாழ்த்து கூறினார். இந்த பதிவும் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையானது.

இதனை தொடர்ந்து தீபாவளி, ராம நவமி போன்ற பண்டிகைக்கு ராகுல் காந்தி ஸ்ரீ ராமரின் புகைப்படம் இல்லாமல் வாழ்த்து தெரிவித்தார். மேலும் விநாயகர் சதுர்த்திக்கு கூட விநாயகர் படமே இல்லாமல் வாழ்த்து கூறினார். இவை எல்லாவற்றிலும் விட சிவபெருமானுக்கு உகந்த நாளான மஹா சிவராத்திரி விழாவிற்கு சிவபெருமானின் புகைப்படத்திற்கு பதிலாக கயிலாய மலையை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

ஆனால் கிறித்துவ, இஸ்லாமிய, பண்டிகை வந்தால் மட்டும் அதற்குரிய புகைப்படத்தை வைத்து வாழ்த்து கூறும் ராகுல் காந்தி ஹிந்து கடவுள்களை மட்டும் புறக்கணிப்பது ஏன் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் நமது அண்டை நாடான வங்க தேசத்தில் கலவரம் ஏற்பட்டு அங்குள்ள பெரும்பான்மையான முஸ்லீம்கள் சிறுபான்மையினரான ஹிந்துக்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்த போதும், அங்குள்ள ஹிந்து கோவில்களை அடித்து நொறுக்கிய போதும், இதனை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை, இந்த நிகழ்விலிருந்தே காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களுக்கு எதிரியான கட்சியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை ஆதங்கத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it