அமெரிக்கா சென்ற அடுத்த நாளே முதலீடுகள் குவிகிறதா ? மக்களை முட்டாளாக்க பார்க்கிறதா திராவிட மாடல் ?

அமெரிக்கா சென்ற அடுத்த நாளே முதலீடுகள் குவிகிறதா ? மக்களை முட்டாளாக்க பார்க்கிறதா திராவிட மாடல் ?

Share it if you like it

முதல்வர் ஸ்டாலின் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் அலப்பறை செய்து வருகின்றனர். அதாவது Yield Engineering Systems நிறுவனத்துடன் 300 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 150 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எனவும், PayPal நிறுவனத்துடன் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எனவும், Microchip நிறுவனத்துடன் 1500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ₹250 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எனவும், ஓமியம் நிறுவனத்துடன் 500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ₹400 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எனவும், GeakMinds நிறுவனத்துடன் 500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், நோக்கியா நிறுவனத்துடன் ₹450 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள இந்த நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்தில் தான் உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்வதற்காக எதற்காக ஸ்டாலின் வெளிநாடு செல்ல வேண்டும் எனவும் பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,

கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க’ என்ற வரிகளும்,
‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தில் ‘சோ’ அவர்கள் நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா? என்று காட்சியும் தான் நினைவில் வருகிறது.

இந்த நிறுவனங்கள் அனைத்துமே தற்போது தமிழகத்தில் இயங்கி வருகிற நிலையில், இதற்காக எதற்கு அமெரிக்கா சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று வியப்பாக இருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க போவதாக சொல்லிவிட்டு அங்கு இறங்கிய மறுநாளே முதலீடுகள் குவிந்தன என்று செய்தி வெளியிடுவது ‘மக்கள் முட்டாள்கள்’ என்ற எண்ணத்தை ‘திராவிட மாடல்’ கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஒரு நிறுவனம் தன் தொழிலை கட்டமைக்க பல கோடிகள் செலவு செய்த இடத்தில் தான், அதை விரிவாக்கம் செய்யவும் முயற்சிக்கும் என்பது சாதாரண பொது அறிவு. ஆனால், அந்த பொது அறிவு தமிழர்களிடத்தில் இல்லை என்று திராவிட மாடல் நினைப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏதோ திரைப்படங்களில் காட்டக்கூடிய பிரம்மாண்டத்தை, கவர்ச்சியை காண்பித்தால் தமிழர்கள் மயங்கி விடுவார்கள் என்று திராவிட மாடல் எண்ணுவது நகைச்சுவை. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *