அகில பாரத வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தின் தேசிய அளவிலான கார்யகர்த்தர்கள் மாநாடு ஹரியானா மாநிலத்தில் உள்ள சமால்காவில் தொடங்கி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. 3 நாள் நடைபெறும் இம்மாநாட்டினை குஜராத் மாநிலத்தின் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் சாது.ரமேஷ் பாய் ஓஜா அவர்கள் நேற்று (20.09.24) தொடங்கி வைத்தார். ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச் செயலாளர் ஆதரனிய.ராம்தத் சக்ரதர் மற்றும் வனவாசி கல்யாண் ஆஸ்ரம் தலைவர் ஆதரனிய.சத்யேந்திர சிங், பொதுச் செயலாளர் யோகேஷ் பாபட், அமைப்புச் செயலாளர் அதுல் ஜோக்* உட்பட பலர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் 2ம் நாளான இன்று ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் டாக்டர்.மோகன் ஜி பாகவத் அவர்களும் கலந்துக் கொண்டு , ஜனஜாதி மக்களின் பூஜையை துவக்கி வைக்கிறார்.
அந்தமான் & நிக்கோபார், லடாக், ஜம்மு & காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் வனவாசி மக்கள் & கார்யகர்த்தர்கள் 3 நாள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
நாடெங்கிலும் 17,394 இடங்களில் வனவாசி மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வனவாசி மக்களிடையே செயல்பட்டு வருகிற மிகப் பெரிய தேசிய அமைப்பு வனவாசி கல்யாண் ஆஸ்ரம் என்று கூறப்படுகிறது.