டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை விரிவுப்படுத்துவதாக மத்திய அரசு அறிவிப்பு !

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை விரிவுப்படுத்துவதாக மத்திய அரசு அறிவிப்பு !

Share it if you like it

நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிச் சேவைகள் துறை (DFS), நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

(யுபிஐ) போன்ற விரைவான கட்டண முறையானது இந்தியாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த யுபிஐ முறையினால் கோடிக்கணக்கானவர்களுக்கு உடனடியான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்த முடிகிறது.

ரொக்கப் பணமில்லா, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் என்ற பிரதமர் மோடி அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த முயற்சி அமைந்துள்ளது. முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை 2023-24-ம் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017-18 நிதியாண்டில் டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கையானது 2,071 கோடியாக இருந்தது. 2023-24 நிதியாண்டில் 18,737 கோடியாக 44% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) அதிகரித்துள்ளது. மேலும், நடப்பு 2024-25 நிதியாண்டின் 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) பரிவர்த்தனை அளவு 8,659 கோடியை எட்டியுள்ளது.

பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.1,962 லட்சம் கோடியிலிருந்து 11% வளர்ச்சியுடன் ரூ.3,659 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, நடப்பு 2024-25 நிதியாண்டின் கடந்த 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்), மொத்த பரிவர்த்தனை மதிப்பு ரூ.1,669 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைச் சூழல் அமைப்பின் முக்கிய அம்சமாக யுபிஐ மாறி உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சி அதன் எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து வருகிறது. யுபிஐ, ரூபே இரண்டும் உலகளவில் வேகமாக விரிவடைந்து வருகின்றன. இது வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.

தற்போது, யுபிஐ ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் போன்ற முக்கிய சந்தைகள் உட்பட 7 நாடுகளில் இது உள்ளது. இது இந்திய நுகர்வோர் மற்றும் வணிகங்களை சர்வதேச அளவில் பணம் செலுத்தவும் பெறவும் அனுமதிக்கிறது. இந்த விரிவாக்கம் பணம் அனுப்புவதை மேலும் ஊக்குவிக்கும், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துடன் உலகளாவிய நிதி நிலப்பரப்பில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலகளாவிய தலைவராக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. யுபிஐ-யின் உலகளாவிய விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் தொடர்ச்சியான எழுச்சியுடன் வேகமாக பொருளாதாரத்தில் வளரும் நாடாக இந்தியா மாறி வருகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *