சித்தாந்தத்தை அடகு வைத்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரரான நீங்கள் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – விளாசிய வானதி சீனிவாசன் !

சித்தாந்தத்தை அடகு வைத்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரரான நீங்கள் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – விளாசிய வானதி சீனிவாசன் !

Share it if you like it

சமீபத்தில் ஒன்றினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளத்தில் ‘ஒரே நாடு ஒரு ஒரே தேர்தல் குறித்து விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில்,

“ ‘ஒரு நாடு ஒரு தேர்தல் உயர் மட்ட குழு ஆலோசனை ஏற்பு மோடியின் இரும்பு போன்ற உறுதியின் வெளிப்பாடு’ – என்கிறார் அமித்ஷா

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் சங்கிலி என்பதைத்தான் ‘மோடியின் இரும்பு போன்ற உறுதி’ என்கிறாரா அமித்ஷா. 400 சீட் என்ற பாஜக-வின் பகல்கனவு கலைந்தது போல இதுவும் கலையும் உள்துறை அமைச்சரே!” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சு.வெங்கடேசன் அவர்களின் பதிவிற்கு பதிலடி தரும் வகையில் கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழகத்திலும் இந்தியாவிலும் தங்கள் கட்சி இருந்த நிலைமையை மறந்துவிட்டு, இன்று வெறும் 2 சீட்டுகளுக்காக மற்றக் கட்சிகளிடம் தங்கள் சித்தாந்தத்தை அடகு வைத்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரரான நீங்கள் பேசுவதற்கு எவ்வித அடிப்படை அருகதையும் இல்லை என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,

“பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கிற்கு விலை சொல்லும்” திரு. சு.வெங்கடேசன் அவர்களே,

ஒரு விவாதம் நடக்கையில் எதுகை மோனையில் சம்பந்தமில்லாமல் எதையாவது பேசி அவ்விவாதத்தை திசை திருப்புவது கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு கைவந்த கலை என்பது நாடறிந்த செய்தி.

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம், 1967 வரை நடைமுறையில் இருந்தது மற்றும் மிக முக்கியமாக மறைந்த திமுக-வின் தலைவர் திரு. கருணாநிதி அவர்களே இத்திட்டத்தை ஆதரித்துள்ளார் என்பதையெல்லாம் இலாவகமாக தவிர்த்து விட்டு, வழக்கம்போல் மடைமாற்றும் வேலையை துவங்கிய உங்களின் போலி பிம்பத்தை தகர்ப்பதற்கான சில கேள்விகள்:

  1. 1967 வரையிலும், 1991, 1996-களிலும் தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் ஒன்றாக நடந்த போது யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?
  2. இன்றளவிலும், ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் ஒன்றாக நடந்துவரும் பட்சத்தில், அங்கு என்ன ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
  3. இவ்வாறு, நமக்கு மிகவும் பழக்கமான, உபயோகமான “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாம் என்ற கருத்தைக் கண்டு நீங்கள் ஏன் இவ்வளவு பதறுகிறீர்கள்?
  4. ஒரு ஆண்டுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட தேர்தல்களை சந்திப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதையும், அவர்களுக்கான நலத் திட்டங்களும் நிலுவையில் வைக்கப்படுவதையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
  5. அல்லது, மக்கள் வளர்ச்சித் திட்டங்களை விட்டுவிட்டு, தங்கள் தேர்தல் வியூகத்தை வகுப்பதிலேயே அரசியல் கட்சிகள் தங்கள் முக்கால்வாசி நேரத்தை செலவிடுவது தான் சரி என்கிறீர்களா?
  6. அனைத்து மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒன்றாக நடத்துவதின் மூலம், நாட்டின் வளங்கள் மற்றும் செலவினங்கள் மிச்சப்படுத்தப்படும் என்பதையும், அந்த வளங்களையும் நிதியையும் நாட்டின் உட்கட்டமைப்பிற்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவழிக்கலாம் என்பதையும் நீங்கள் எதிர்க்கிறீர்களா?
  7. வருடாவருடம் பல தேர்தல்கள் நடப்பதால், கருப்பு பண புழக்கம் அதிகரித்துள்ளது என்பதையும், ஒரே தேர்தலாக நடத்துவதின் மூலம் அதைக் கட்டுபடுத்த முடியும் என்பதையும் நீங்கள் மறுப்பது ஏன்?
  8. “கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவோம்” என்ற வார்த்தையைக் கேட்டாலே, ஏன் பயத்தில் பாய்ந்து வந்து போர்க்கொடி பிடிக்கிறீர்கள்?
  9. ஒரு மாநிலத்தின் சூழல், மக்கள் தொகை, பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணிகளால் ஒரு தேர்தலை பல கட்டங்களில் நடத்துவதற்கும், அதிகப்படியான நேரம் மற்றும் பணத்தை செலவழித்து வருடாவருடம் பல தேர்தல்களை நடத்துவதற்கும் கூட வித்தியாசம் தெரியாதவரா நீங்கள்?
  10. இவ்விவாதத்தின் அடி நாதத்தை மடை மாற்றாமல், நீங்கள் ஏன் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை எதிர்க்கிறீர்கள் என்பதற்கான காரணங்களை ஆதாரங்களுடன் கூறமுடியுமா?

எப்படியும் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க போவதில்லை, அப்படியே நீங்கள் பதிலளித்தாலும் அவை உங்கள் கற்பனையின் கட்டுக் கதைகளாகத் தான் இருக்குமே தவிர, ஆதாரப்பூர்வமான செய்தியாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். காரணம், ஒவ்வொரு முறையும் எவ்வித சான்றுகளுமின்றி செவி வழி செய்தியை வைத்து மட்டுமே, ஒரு விவாதத்தை நீங்கள் எப்படி திசை திருப்புவீர்கள் என்பது எனக்கும் தமிழக மக்களுக்கும் தெரிந்த ஒன்று தான்.

எனவே, 1951- பாரதிய ஜனசங்கமாக துவங்கி, 1980-ல் பாஜக-வாக வலுப்பெற்று, இன்று தவிர்க்க முடியாத சக்தியாக மக்கள் மனதிலும், இந்திய வரலாற்றிலும் நீங்கா முத்திரையை அழுத்தமாக பதித்துள்ள எங்களின் கட்சி வளர்ச்சியைப் பற்றி, 1952-ல் தமிழகத்திலும் இந்தியாவிலும் தங்கள் கட்சி இருந்த நிலைமையை மறந்துவிட்டு, இன்று வெறும் 2 சீட்டுகளுக்காக மற்றக் கட்சிகளிடம் தங்கள் சித்தாந்தத்தை அடகு வைத்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரரான நீங்கள் பேசுவதற்கு எவ்வித அடிப்படை அருகதையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *