ஒடிசா அரசானது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளக புகார் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதாவது Internal Complaint Committees (ICC)
அனைத்து உயர் கல்வி நிறுவனகளும் உள்ளக புகார் குழுவை உருவாக்கி, செப்டம்பர் 30 க்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒடிசா அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், அனைத்து பட்டப்படிப்பு கல்லூரி முதல்வர்கள், அனைத்து அரசு ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோருக்கு உயர்கல்வி துறை கடிதம் எழுதியுள்ளது.
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி) சட்டம், 2013 இன் படி, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் (HEIS) தங்கள் ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது அவசியம்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. .
“இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற, ஒவ்வொரு நிறுவனமும் மேலே உள்ள சட்டத்தின் பிரிவு 4 இன் படி உள்ளக புகார் குழுவை (ICC) அமைக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், நேர்மறை மற்றும் மரியாதைக்குரிய பணியிடத்தை நிரப்படுவதற்கும் ICC உள்ளக புகார் குழு முக்கியமானது. ,” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.