ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு இதே நாளில் (அக் -30) பிறந்த பசும்பொன் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவரை இன்று நினைவுகூர்ந்து மரியாதை செய்கிறது. அவரது மறைவு நாளும் இன்றைய தினம் தான்… எனவே தேவர் ஜெயந்தியும் தேவர் குருபூஜையும்
ஒரே நாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..சிறுவயதில் இருந்து நாட்டுப் பற்றும் சுதந்திர வேட்கையும், தெய்வபக்தியும் கொண்டு விளங்கியவர்.ஆன்மீகவாதியாகவும் ஜாதிப்பாட்டை எதிர்ப்பருமாக வாழ்ந்தவர்.எல்லாவற்றிற்கும் மேலாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர் ஆட்சியை அகற்ற ஆயுதமேந்தி ராணுவத்தை திரட்டிய போது அவருக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து பெரும்படைய திரட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிய பார்வேர்ட் பிளாக்கிற்கு தமிழக தலைவராகவும் தேசிய துணைத் தலைவராகவும் இருந்தவர்.இப்படி சுதந்திர வேட்கையை தன் மூச்சாக கொண்டு வாழ்ந்து தேசியத்தை போற்றிய
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் புகழை தமிழக மக்கள் போற்றி மகிழ்கிறது.