அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5- ம் தேதி நடைபெற உள்ள நிலையில் விஐபிகள் வாக்குப்பதிவு செய்யத்து வருகின்றனர்.
அதிபர் ஜோபைடன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். எந்த முறையும் இல்லாத அளவில் இம்முறை அமெரிக்க தேர்தல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பைடன் போட்டியில் இருந்து விலக அவருக்கு பதிலாக ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஷ் களமிங்கி படுத்தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர்
டோனால்ட் டிரம்ப் களத்தில் இறங்கினார்.
இரு வேட்பாளர்களும் கடுமையாக வார்த்தை களால் தாக்கிக் கொண்டனர். கருத்து கணிப்பில் முதலில் பின் தங்கிய டிரம்ப் முந்தினார். ஆரம்பத்தில் இருந்தே டிராம் பரபரப்பாக பேசப்பட்டார். காரணம் என்னவென்றால் அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிகள் தான்…
எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இம்முறை டிரம்பிற்காக உலகக் கோடீஸ்வரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் களம் இறங்கி பணத்தை வாரி இறைத்து வருகிறார்….
அதேவேளையில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பில்கேட்ஸ் களம் இறங்கி நிதி உதவி செய்கிறார். அதிபர் வேட்பாளர்களின் பிரச்சாரத்தை காட்டிலும் இவர்கள் பற்றிய செய்திகள் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் அமெரிக்காவின் தேர்தல், இந்தியாவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கப் போவது யார் என்பது யார்? என தெரிந்து கொள்ளும் ஆர்வம் இந்தியர்களுக்கும் எழுந்துள்ளது.