“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்” நடத்தும் “இஸ்லாம் – ஓர் இனிய மார்க்கம்” என்ற கருத்தரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி காவல் ஆணையாளர் அவர்களிடம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமாரி கோட்டச் செயலாளர் ஸ்ரீ முத்துக்குமார், கோட்ட சத்சங்க பொறுப்பாளர் ஸ்ரீ ஆவுடையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் ஸ்ரீ பே. மாருதி ராஜன், VHP மாவட்ட செயலாளர் ஸ்ரீ T. சிவா, மாவட்ட தலைவர் ஸ்ரீ K. வெங்கடேசன், வழக்கறிஞர் ஸ்ரீ M. கணேசன், பஜ்ரங்தள் பொறுப்பாளர் வழக்கறிஞர் ஸ்ரீ S. ஆனந்த கார்த்திகேயன் உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.