கொரோனா நெருக்கடி காலத்திலும் பாதிப்புகளை மறந்து அரசு மதுக்கடைகளைக் திறக்க வலியுறுத்தியுள்ளது. மது குடிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி மிக தெளிவாக பாரதிய மஸ்தூர் சங்கம் அமைப்பு செயலாளர் எஸ்.துரைராஜ் விளக்கியுள்ளார்.
மதுவால் ஏற்படும் தீமைகள் :
- பண்பாடு, கலாச்சாரம் சீர்குலைவு
- குடும்ப அமைதி கெடுதல்
- உடல்நலம் பாதித்தல்
- பொருளாதார இழப்பு
- வேலைக்கு செல்லாதிருத்தல்
குடும்ப அமைதி கெடுதல் :
மது அருந்தி தன்னிலை இறப்பதால் தாய் தந்தை மனைவி குழந்தைகள் இடமிருந்து தனித்திருத்தல்.
விளைவு : அவர்களின் அன்பை இழத்தல் நாளடைவில் மனோரீதியான நோய்களுக்கு ஆட்படுதல் குழந்தைகளுக்கு தகப்பனின் அன்பு, வழிகாட்டுதல் இழப்பு ஆகியவற்றால் அவர்கள் வழிதவறுதல்
மற்றும் குடும்பத்தில் நிம்மதியின்மை மேலும் இத்தகைய குடும்பங்களில் சில சிறுவர்களில் மதுபழக்கதிற்கு அடிமையாவது.
உடல்நலம் பாதித்தல் :
- தொடர்ந்து மது அருந்துவதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்புத்தளர்ச்சி, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் 200 வகையான நோய்கள்
விளைவு : மஞ்சல் காமாலை உள்ளிட்ட கடுமையான நோய்களால் பீடிக்கப்படுதல், ஆண்மை இழத்தல் சமூகத்தில் மதிப்பிழத்தல், பொருளாதார ரீதியிலான இழப்பு.
- ஒருவர் [40 வயதானவர்[ கடந்த 20 வருடங்களாக குடிப்பழக்கம் – 60 வயது வரை வாழ்ந்தால் மொத்தம் 40 வருடம். மது அருந்துதல் சரியா சராசரியாக :-
ஒரு நாள் செலவு – ரூ. 200
ஒரு மாத செலவு – ரூ. 6000
ஒருவருட செலவு – ரூ. 72,000
40 வருடங்களுக்கு – ரூ. 28,80,000
- நோய்வாய்ப் படுவதால் குறைந்தபட்ச சிகிச்சை செலவு [வாழ்நாள் முழுமைக்கும்] – 2,00,000
மொத்தம் : 28,80,000 + 2,00,000 = ரூ.30,80,000
- ஆக 20 வயதில் ஒருவர் மது அருந்த தொடங்கினால் 40 வருடங்களுக்கு [விலை உயர்வு உட்பட] ரூ.40 லட்சம் இழப்பு ஏற்படும்.
வேலைக்கு செல்லாதிருத்தல் :
- உடல் நலிவாலும் மன உளைச்சலாலும் மாதத்தில் பத்து முதல் பதினைந்து நாட்கள் மட்டும் வேலைக்குச் செல்லுதல். [ 5 நாட்கள் விடுமுறை என கொள்வோம்]
மீதி 10 நாள் கூலி இழப்பு சராசரியாக – ரூ.5,000
ஒரு வருடத்திற்கு – ரூ.60,000
40 வருடத்திற்கு – ரூ.24,00,000
ஆக மதுவிற்காகும் செலவு – ரூ.30,80,000 + 24,00,000 = 54,80,000
- இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் பேரதிர்ச்சி கலந்த பிரமிப்பூட்டும் நஷ்டம் ஏற்படுவதை காணலாம்.
அவையாவன :
ஒவ்வொரு மாதமும் குடிப்பதற்கான செலவு – ரூ. 6,000
ஒவ்வொரு மாதமும் வேலை இழப்பால் வருமான நஷ்டம் – ரூ. 5,000
ஒரு மாதத்திற்கு மொத்தம் – ரூ.11,000
40 வருடத்திற்கு 480 மாதங்கள்
- ஒவ்வொரு மாதமும் ரூ.11,000 -ஐ Monthly recording deposit scheme முறையில் FD செய்தால் 480 மாதங்களுக்கு கிடைக்கும் தொகை – ரூ.2,18,38,484 [6 சதவிகித வட்டி]
வாழ்நாள் முழுமைக்கான குறைந்தபட்ச சிகிச்சை செலவு – ரூ.2,00,000
எனவே மொத்தம் – ரூ.2,20,38,484
இரண்டு கோடியே 20 லட்சத்து 38 ஆயிரத்து 484 ரூபாய்
நன்மை [ மதுவால் அரசிற்கு கிடைக்கும் வருவாய் ]
- 14.03.2020 மார்ச் அன்று அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்களின் அறிக்கையின்படி எதிர்பார்ப்பு
நிதியாண்டு 2019-20-ல் ரூ.31,000 கோடி
2020 பிப்ரவரி 29 வரை கிடைத்த வருமானம் ரூ.28,839.08 கோடி
இந்த இழப்பை ஈடுகட்ட வழி :
- தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை ஏறத்தாழ 6 கோடி இதில் 1 கோடி பேரை தவிர்த்து ஏனைய 5 கோடி பேரிடம் ‘தமிழக மக்கள் நலவாழ்வு நிதி’ என பெயரிட்டு மாதம் ரூ. 50 வசூல் செய்தால் வருடத்திற்கு ரூபாய் 3,000 கோடி கிடைக்கும்.
- இதற்காக பெரிய அளவில் பிரச்சாரம் தேவைப்படும். ‘மாதம் 50 ரூபாயா அல்லது சீரழியும் தமிழகமா’ என்கிற கேள்வியை முன்வைத்தால் நிச்சயமாக மக்கள் இதை விட அதிக நிதி அளிப்பர்.
- APL கார்டு உரிமையாளர்களிடம் கூடுதலாக வசூல் செய்ய வேண்டும்
- தொழில் நிறுவனங்களிடம் வருமானத்திற்கு ஏற்ப இதே கோரிக்கையை முன்வைத்து வசூல் செய்யலாம்
- இவை குறிப்பிட்ட சில காலத்திற்கு நடைமுறைப்படுத்த கூடியவை
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாம்
- மணல் குவாரிகளில் திருட்டை தடுப்பது
- தென்னை, பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி விவசாயிகளை அனுமதித்தல், இதனை பதப்படுத்தி பாக்கெட் முறையில் விற்பனை செய்யலாம் இதற்கு 30 சதவிகிதம் வரை வரி வசூலிக்கலாம்.
- பொருளாதார நிலை மேம்படும் வரை மிகவும் அத்தியாவசியமானவர்களுக்கு மட்டும் இலவசங்கள் வழங்குவது
- 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அளித்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விவசாய பணிகளுக்கு பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வருவாயைப் பெருக்குதல்.
[வேலைத்திறனை உறுதிப்படுத்துவது அவசரம் ]
தவிர,
- சமய பெரியோர்கள், அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல் தொழிற்சங்கங்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினை அமைத்து அரசிற்கான வருமானத்தை உயர்த்துவது பொதுமக்களின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தலாம்.
- 50 வருடங்களாக தமிழக மக்களை சீரழித்து வரும் மதுவில் இருந்து காக்க ஆண்டவன் அளித்த வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.