Share it if you like it
- கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வந்த சித்த வைத்தியர் தணிகாசலம் தனது சமூக வலைதளங்கள் மூலம் வதந்தியை பரப்பி வருவதாகவும், அவர் போலி மருத்துவர் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், சென்னை காவல்துறையிடம் புகாரளித்திருந்தது. மேலும் அவர் மருத்துவராக பணியாற்ற தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றத்தில் எவ்வித சான்றிதழையும் பெறவில்லை, அவர் போலி மருத்துவர் என்றும் தமிழ்நாடு சித்தமருத்துவ மன்றம் குற்றம் சாட்டியிருந்தது.
- மேலும் இவர் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் அந்த மருந்தை தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க படவேண்டும் என்று கூறி தொடர்ந்து மக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பிவந்துள்ளார்.
- இந்த நிலையில், இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று சென்னையில் சித்த வைத்தியர் தணிகாசலத்தை கைது செய்துள்ளனர்.
Share it if you like it