பால்கர் சம்பவம் – இந்துக்கள் கொல்லப்பட்டால் யாரும் குரல் கொடுக்காதது ஏன் ? சித்தாந்த ரீதியிலான காரணங்கள்…அஸ்வத்தாமன்!

பால்கர் சம்பவம் – இந்துக்கள் கொல்லப்பட்டால் யாரும் குரல் கொடுக்காதது ஏன் ? சித்தாந்த ரீதியிலான காரணங்கள்…அஸ்வத்தாமன்!

Share it if you like it

பால்கர் சம்பவத்தை பற்றி தாமதமான பதிவு என நீங்கள் நினைக்கலாம் . அனேகமாக நாம் எல்லோரும் அதைப் பற்றி மறந்துவிட்டு அடுத்தடுத்த விஷயங்களை பார்க்கப்போய் விட்டோம். அதை மறந்தால் , அப்படியே விட்டு விட்டால் அடுத்தடுத்தும் அதே போல நடக்கும்.

ஆகவே தான் இப்போது இந்த பதிவு. “இருசக்கர வாகனத்தை திருடியதற்காக ஒரு இஸ்லாமியர் தாக்கப்பட்டபோது ஒட்டுமொத்த இந்தியாவும் “குழு தாக்குதல்” ஆல் நிறைந்து உள்ளது போன்று ஒரு பொய்யான சித்தரிப்பை வரிந்துகட்டிக்கொண்டு ஏற்படுத்தின பல ஊடகங்கள், அதற்க்கு மூக்கை சிந்திக்கொண்டு கடிதம் எழுதின.

யாதவர் சமுதாயத்தை சார்ந்த ஒருவரின் கன்றுக்குட்டியை இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த ஒரு முதியவர் திருடி அதை சமைத்து சாப்பிட்டு விட்டார். அதில் நடந்த தகராறில் அவர் கொல்லப்பட்டார். அதற்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாட்டுக் கறிக்காக சிறுபான்மையினர் கொல்லப் படுவது போன்று ஒரு அபாண்டமான சித்தரிப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக ஆதாயம் அடைந்தார்கள் அந்நிய நாட்டு சித்தாந்தவாதிகள்.

மேற்கூறப்பட்ட சம்பவம் எதிலும் அவர் இந்த மதத்தை சார்ந்தவர் என்பதற்காக கொல்லப்படவில்லை. ஆனால் மும்பையில் பால்கர் என்கின்ற இடத்தில் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் சாதுக்கள். இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டால் வரிந்து கட்டிக்கொண்டு மத ரீதியான தாக்குதல் என்று முடிவுக்கு வரும் ஊடகங்கள், உண்மையான மத ரீதியான இந்த தாக்குதலுக்கு வரிந்து கட்டிக்கொண்டு சப்பை கட்டு கட்டினார்கள்.

‘திருடர்கள் என்று நினைத்துக்கொண்டு தாக்கியதாக’ இட்டுக்கட்டி கூறின ஊடகங்கள். சன்னியாசிகள் காவி உடை அணிந்து இருந்த நிலையில் திருடர்கள் என்று எதை வைத்து முடிவு செய்தார்கள். அடுத்ததாக தாங்கள் வந்த கார் தாக்கப்பட்ட உடனேயே சன்னியாசிகள் காவல்துறையை உதவிக்கு அழைத்து இருக்கின்றனர்.

அவர்களும் ஸ்பாட்டுக்கு வந்து அவர்களை மீட்டு சென்றுள்ளார்கள். திருடர்களாக இருந்தால் எப்படி காவல்துறை அழைத்து இருப்பார்கள். தவிர காவல்துறை வந்து விளக்கம் கொடுத்து தானே அவர்களை மீட்டு சென்றிருக்கும். அதன் பிறகும் அவர்களை திருடர்கள் என்று நினைக்க வேண்டிய அவசியமென்ன ? அதோடு, சன்னியாசிகளை போலீசார் பத்திரமாக தங்க வைத்துள்ளனர்.

அந்த இடம் எப்படி அந்த கும்பலுக்கு தெரிந்தது? நள்ளிரவில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடி போயி அந்த சன்னியாசிகளை கொல்ல வேண்டிய அவசியம் என்ன ? இப்படி நடந்த சம்பவத்தை அலசினாலே பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால் இது சிபிஎம் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்பட்ட திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று சந்தேகப்படுவதற்கு போதிய ஆதாரம் உள்ளது.

ஏனெனில் தாக்குதலில் ஈடுபட்டதாக ஜெயராம் தக் பவார், மகேஷ் சீதா ராம், கணேஷ் தேவ்ஜி ராவ், ராம்தாஸ், சுனில் சோமாஜி, ஆகிய 5 பேர் முக்கிய குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே சிபிஎம் கட்சியைச் சார்ந்தவர்கள். மேலும் பால்கர் மாவட்டம் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி.

இந்த பகுதியில் நீண்ட காலமாக கிறிஸ்தவ மிஷினரிகள் கோலோச்சி வருகின்றனர். அந்த பகுதியில் மதமாற்ற பணிகள் ஜரூராக செய்து வருவதோடு பிற மதத்தவர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் மூடக்குவதாக புகார்கள் உள்ளது.

தற்போது கூட கஷ்ட காரி எனப்படும் கிறிஸ்தவ என்.ஜி.ஓ வைச் சேர்ந்த ஷீரஸ் பல்சாரா என்ற மிஷினரி, இக்கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இருப்பவர்களை ஜாமினில் வெளியே கொண்டு வர முயற்சி செய்வது அம்பலமாகி உள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் இருந்து ஒரு விஷயம் மட்டும் நன்கு புரிகிறது. அது, இந்த நாட்டில் இந்துக்களுக்கு குரல் கொடுக்க பாஜக வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது தான் .ஒரு கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ சொந்தப் பிரச்சினைக்காக கொல்லப்பட்டால் கூட அதை ஊதி பெரிதாக்கும் அரசியல் கட்சிகள், இந்து சன்னியாசிகள் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டதற்கு குரல் கொடுக்கவில்லை.

ஆகவே மதச்சார்பின்மை என்ற போர்வையில் தொடர்ந்து இந்துக்கள் மட்டுமே வஞ்சிக்கப்பட்டு வருவதை இனியாவது இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் படுகொலைக்கு சோனியா காந்தி குரல் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டுச் சொன்ன ஒரே காரணத்திற்காக குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு.

மாநில காவல் துறையால் வழக்கு பதியப்பட்டு மனித உரிமைக்கு எதிராக பன்னிரண்டரை மணி நேரம் ஒன்றும் இல்லாத வழக்குக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வெளியே வந்திருக்கிறார் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி . தனிப்பட்ட காரணங்களுக்காக சிறுபான்மையினர் தாக்கப்பட்டால் கூட கத்தி கதறி கூப்பாடு போடுகின்ற கட்சிகளும் ஊடகங்களும் இந்த விஷயத்திற்காக வாயை தைத்துக்கொண்டு இருக்கின்றனவே என்று பலரும் கேட்கிறார்கள்.

கம்யூனிசம் ,திராவிடம், இத்தாலிய இந்திரா காங்கிரஸ், என வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கிய சித்தாந்த வாதிகளுக்கு ஒரே பொது எதிரி ‘இந்துத்துவம்’ என்று சொல்லப்படுகின்ற இந்திய சித்தாந்தம். மற்ற வெளிநாட்டு சித்தாந்தங்கள் அரசிலிருந்து ஆரம்பித்து மக்களை நோக்கி இறங்கும் போது , நமது இந்திய சித்தாந்தம் மனிதனின் மனதில் இருந்து ஆரம்பித்து பொருளாதாரம் ,அரசு, அரச தர்மம், என்று மேல் நோக்கி செல்லுகிறது.

சோதனை அளவில் மற்ற சித்தாந்தங்கள் தோற்றுப்போன சித்தாந்தங்கள் ஆக இருக்கும்போது. இந்திய சித்தாந்தங்கள் என்றுமே சாகாது, ‘சனாதன தர்மம்’ ஆக வாழ்கிறது. அந்நிய நாட்டு சித்தாந்தங்கள் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில் உறங்கிக் கொண்டிருக்கும்போது.

நம் இந்திய சித்தாந்தம் மக்களின் வாழ்வியலில் கலந்து நாடி இரத்தம் சதை என்று பிணைந்திருக்கிறது. எனவே தான் இந்திய சித்தாந்தத்தை அழிக்க நினைப்பவர்கள் , இந்துக்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அன்னிய நாட்டு சித்தாந்தவாதிகளின் அடிப்படைக் கொள்கை என்பதே ” இந்துக்கள் மதம் மாற வேண்டும் ,இல்லையென்றால் சாக வேண்டும்”.

ஆகவேதான் , பால்கரில் சாதுக்கள் கொடூரமாக கொல்லப்படும் பொழுது கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸ்களுக்கும் உள்ளூர மகிழ்ச்சி பொங்கி சந்தோஷம் பிரவாகம் எடுக்கிறது. திருட்டுத் திராவிடமோ ஆனந்தக் கூத்தாடுகிறது .

திருபுவனத்தில் ராமலிங்கம் கொல்லப்பட்டபோது ஆனந்தக் கூத்தாடியதே அது போல இது வெறும் ஓட்டு அரசியல் மாத்திரம் அல்ல. இது சித்தாந்த ரீதியிலான பிரச்சனை. அன்னிய நாட்டு சித்தாத்தங்களை அழித்தொழித்தாலன்றி இந்துக்கள் இங்கே வாழ முடியாது. இதில் இவர்கள் இதைக் கண்டிப்பார்கள் என்று நாம் நினைத்தோம் என்றால் அதுதான் அறியாமையின் உச்சம்.


Share it if you like it