700 க்கும் மேற்பட்ட தப்லீகி ஜமாதிகளின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்த டெல்லி போலீசார் !

700 க்கும் மேற்பட்ட தப்லீகி ஜமாதிகளின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்த டெல்லி போலீசார் !

Share it if you like it

  • நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஒரு ஹாட்ஸ்பாட் மையமாக மாறிய நிஜாமுதீன் மார்க்கஸில் பங்கேற்ற தப்லீஹி ஜமாஅதிகள் மீது தில்லி குற்றப்பிரிவு விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது. விசா மீறல் மற்றும் பயண வரலாற்றை மறைத்ததற்காக சுமார் 700 க்கும் மேற்பட்ட ஜமாஅதிகளின் விசாக்கள் மற்ற ஆவணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறையினர் அவர்கள் மீது ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் தப்லீஹி ஜமாஅத்தின் தலைவர் மௌலானா முகமது சாத் மற்றும் அவரது கூட்டாளிகள் பலர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
  • வெளிநாட்டு தப்லிகிகளுக்கு விசாக்கள் எவ்வாறு கிடைத்தன, எந்த அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. தப்லிகிகளின் பயண வரலாறு குறித்தும் டெல்லி காவல்துறை விசாரித்து வருகிறது.
  •  மார்க்கஸில் கலந்து கொண்டவர்களில் பலர் நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று  மசூதிகள் மற்றும் வீடுகளில் தங்களை மறைத்துக்கொண்டிருந்தனர். சிலர் எதிர்ப்பைக் காட்டினர் மற்றும் தனிமைப்படுத்தலின் போது அரசாங்க விதிமுறைகளை பின்பற்றவில்லை. தமிழ்நாடு, பீகார், டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள மசூதிகளில் பல வெளிநாட்டு தப்லிகிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • டெல்லி காவல்துறை மௌலானா சாதிற்கு பல நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் இதுவரை விசாரணைக் குழு முன் ஆஜராகவில்லை. டெல்லி காவல்துறையும் மௌலானா சாத் ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் இதுவரை அவர் அந்த கோரிக்கைக்கு சம்மதிக்கவில்லை. மேலும் பணமோசடிச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குநரகம் ஒரு வழக்கைத் அவர்மீது தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it