கொடூரமாக தாக்கப்பட்ட தாய் மெளனம் காக்கும் போலி சமூக போராளிகள்..!

0
364
கொடூரமாக தாக்கப்பட்ட தாய் மெளனம் காக்கும் போலி சமூக போராளிகள்..!

உலகில் மிக கொடூரமான உயிரினம் எது என்று கேட்டால். பலரும் காட்டில் வாழும் மிருகங்களின் பெயர்களை கூறுவார்கள். உண்மையில் மனித தன்மை துளி கூட இல்லாத நபர்களை தான் உலகின் மிகக் கொடூரமான உயிரினம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், கிறிஸ்துவ மத மாற்ற மாஃபியாக்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த ரௌடிகள் என மனிதர்களில் சகிப்புத்தன்மை துளி கூட இல்லாத பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது மேற்கு வங்க முதல்வரும் அவரது கட்சியினரும் இணைந்துள்ளனர் என்பது நிதர்சனம்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த டம்டம் என்கின்ற பகுதியை சேர்ந்தவர் கோபால் மஜூம்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர் மற்றும் பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு கொண்ட நபராக இருந்து வருகிறார்.

தங்களுக்கு பிடிக்காத கட்சிக்கு ஆதரவாக இருப்பதால். அந்தப் பகுதியை சேர்ந்த சில அயோக்கியர்களுக்கு இது கடும் கோபத்தைக் உண்டாக்கி உள்ளது. இதனால் பல முறை கோபால் மஜூம்தார் அவர்களை ’நீ’ பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என்று மிக கடுமையாக எச்சரித்துள்ளனர்.

அதற்கு துளியும் கவலைப்படாமல் கோபால் பாரதிய ஜனதா கட்சிக்கு தொடர்ந்து தனது ஆதரவினை வழங்கியதோடு மட்டுமில்லாமல். அந்த கட்சிக்கு தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

இதனை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாத திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அயோக்கிய சிகாமணிகள். அவரை மிரட்டி உள்ளார்கள்., மிரட்டலுக்கு அடிபணியாமல் கோபால் மஜூம்தார் பா.ஜ.க-விற்கு ஆதரவாக பணியாற்றியுள்ளார்.

இதனை ஏற்று கொள்ள முடியாமல். மம்தா கட்சியை சேர்ந்த குண்டர்கள், நேரடியாக மஜூம்தார் வீட்டுக்குள் புகுந்து அவருடைய 80 வயதுக்கு மேல் இருக்கும் தாயாரை மிக கடுமையாக தாக்கியுள்ளனர்.

கழுத்து, தலை, மற்றும் அவரோட முகம் என அவரது உடலின் பல பகுதிகளில் மோசமான முறையில் தாக்கியுள்ளனர். மேலும் இதை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டலும் விடுத்துள்ளனர் மமதா பானர்ஜியின் ரவுடி பட்டாளம்.

தூக்கில் தொங்கவிடப்பட்டு கொல்லப்பட்ட பாஜகவை சேர்ந்த சிசுபால்., rss ஊழியர் பந்து பிரகாஷ், அவரோட கர்பிணி மனைவி மற்றும் 8 வயது மகன் கொலைன்னு கிட்டத்தட்ட 300- க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் மேற்கு வங்கத்துல கொல்லப்பட்டிருப்பதாக அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் கூறி இருந்த நிலையில். தற்பொழுது இந்த துயர சம்பவம் அரங்கேறி இருப்பது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவருமான நந்து கிருஷ்ணன் எனும் இளைஞர் படு கொலை செய்யப்பட்டு இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

சகிப்புத்தன்மை, மனிதநேயம், என அடிக்கடி மேடைகளிலும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் கத்தி, கூப்பாடு, போடும் தி.க, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி சீமான்,  போலி போராளி பியூஸ் மானுஷ், திருமுருகன் காந்தி, அருணன், சுந்தரவள்ளி, வேல்முருகன், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், போன்றவர்கள் இது குறித்து வாய் திறக்காமல்  வழக்கம் போல கோமா நிலையில் இருப்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், மொழி, கட்சி, என்று பார்த்த பின்பு அதன் பிறகு வாய் திறக்கும் மேற்கூறிய நபர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here