கர்நாடகாவில் 102 வயது மூதாட்டி ஒருவர் பாதயாத்திரையில் ஈடுப்பட்டு, வனப்பகுதி வழியாகச் சென்று, புகழ்பெற்ற மலையான மகாதேஷ்வரா மலையில் ஏறி, பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டி பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவின் தும்குரு மாவட்டத்தில் உள்ள திப்தூர் நகரைச் சேர்ந்த மூதாட்டி பர்வதம்மா, தல மலையிலிருந்து 18 கி.மீ தூரம் மலையேற மகாதேஷ்வரா மலைக்கு நடந்து சென்று மகாதேஸ்வராவை தரிசனம் செய்தார்.
இந்த தள்ளாடும் வயதிலும் நடந்தே கடவுளை தரிசிக்க வந்திருக்கிறீர்களே ? என்ன வேண்டுதலுக்காக வந்தீர்கள் என்று உடன் பயணித்த யாத்ரீகர்கள் கேள்வி கேட்டதற்கு, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்,” என்கிறார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் ?என்ற கேள்விக்கு, ”நம் தேசத்திற்கு நல்லது நடக்கும்” என்கிறார் மூதாட்டி பர்வதம்மா.
மேலும் மழை வேண்டி பாதயாத்திரை மேற்கொள்வதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். “மழை பெய்யாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மழை, விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் எப்படி வாழ்வது? கால்நடைகள் தண்ணீருக்கு ஏங்கி தவிக்கின்றன. காட்டில் விலங்குகளுக்கு தண்ணீர் இல்லை. அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறுகிறார்.
இவ்வாறு அந்த மூதாட்டி பேசும்போது அருகில் இருந்த பக்தர்கள் கைதட்டி விசில் அடிப்பதைக் காணலாம்.
மலே மகாதேஷ்வரா மலை கர்நாடகாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற இந்து புனித யாத்திரை தலமாகும். இங்கு தமிழகம், கேரளா மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
https://x.com/thatmarineguy21/status/1765972633894686954?s=20