ஹிந்து மதம் மற்றும் வள்ளுவர் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அசராமல் பதில் அளித்த காணொளி வைரலாகி வருகிறது.
சிறந்த பேச்சாளர், வழக்கறிஞர் மற்றும் பா.ஜ.க. மாநில செயலாளராக இருப்பவர் அஸ்வத்தாமன். இவர், மெட் பாக்ஸ் இணையதள யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ; காவி சாயத்தை வள்ளுவருக்கு யாரும் பூசவில்லை. காவியாக இருந்த வள்ளுவருக்கு (தி.மு.க.) தான் வெள்ளை சாயம் பூசப்பட்டு இருக்கிறது. திருவள்ளுவர் என்றுமே காவியாக தான் இருந்தார். ஹிந்து தர்மம் என்பது மூடநம்பிக்கை கிடையாது.
இராபர்டு கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் என்றைக்கு தமிழகம் வந்தார்களோ அந்தநேரத்தில் இருந்து ஹிந்துமதம் என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு எரிகிறது. இன்றைக்கு, கால்டுவெல்லின் புத்திரர்கள் அவர்களின் வழி வந்தவர்கள் தான் ஆட்சியை நடத்தி வருகின்றனர். அதன்காரணமாக, ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் இன்று வரை வெளிப்படையாக நடந்து வருகிறது.
ராஜ ராஜ சோழனை ஹிந்துவாக காட்டாமல் கிறிஸ்தவராகவோ அல்லது இஸ்லாமியராகவோ தான் காட்ட வேண்டுமா? என கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.