ஈ.வெ.ரா.வே சங்கியாதான் இருந்தார்… ஆதாரத்தை அடுக்கிய பா.ஜ.க. மூத்த தலைவர்!

ஈ.வெ.ரா.வே சங்கியாதான் இருந்தார்… ஆதாரத்தை அடுக்கிய பா.ஜ.க. மூத்த தலைவர்!

Share it if you like it

ஈ.வெ.ராமசாமி தீவிர இறைபக்தி கொண்டவர் என்பதற்கான ஆதாரம் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் எழுதிய புத்தகத்தில் உள்ளது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது;

பாட புத்தகத்தில் பொய்யான தகவலை தருகின்றனர். குழந்தையாக, இருக்கும் போதே அவர் இறை மறுப்பு கொள்கை கொண்டவர் எனவும், பகுத்தறிவு பேசியதாக சொல்கின்றனர். ஈ.வெ.ரா. 1925 – ஆம் ஆண்டு குடியரசு இதழை துவக்கினார். அதில், பாரத மாதா படம், முனிவர் தவம் செய்வது போன்ற படம் மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் எனும் குறல், பாரதியின் வரிகளான சாதிகள் இல்லையடி பாப்பா போன்றவை இடம் பெற்று இருந்தன.

இதுதவிர, மூன்று நோக்கங்களை முதல் குடியரசு இதழில் அவர் அறிவித்து இருக்கிறார். தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இந்த மூன்று நோக்கங்களுக்காக இந்த இதழ் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. திருப்பாதிரிப்புலியூரில் சிவசண்முக மெய்ஞானியார் எனும் துறவியை அழைத்து வந்துதான் குடியரசு இதழை ஈ.வெ.ரா. துவக்கினார். ஈஸ்வரன் அருளால் சாமியின் நேரம் கிடைத்து நாம் இந்த இதழை துவக்கி இருக்கிறோம். இதுயெல்லாம், நம் பூர்வ ஜென்ம புண்ணியம் என ஈ.வெ.ரா. கூறியிருந்தார் என பா.ஜ.க. மூத்த தலைவர் கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அவர் பேசிய காணொளியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it