சமீபத்தில் சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் தெனாவெட்டாக பொதுமக்களை அச்சமுறுத்தும் வகையில் தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த பாஜக மாநில செயலாளர் மற்றும் வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோபமடைந்து அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி, ஓட்டுனரிடம் சென்று மாணவர்கள் படிக்கட்டில் இப்படி தொங்கிக் கொண்டு வருகிறார்கள். நீங்கள் கேட்கமாட்டீர்களா ? மேலிருந்து கீழே விழுந்து உயிர் போனால் என்னாவது ? உடனே பேருந்தின் பின்பக்கம் சென்ற அவர், தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை இழுத்து வெளியே இறக்கினார். அதிலும் பேருந்து மீது ஏறிய ஒரு பள்ளி மாணவனை சரமாரியாக அடித்தார். மேலும் மாணவர்களை ஏன்டா அறிவில்ல என அழைத்து கடுமையாக அதட்டினார். மேலும் நடத்துனரிடம் ஏன் நீங்கள் இதையெல்லாம் கேட்க மாட்டீர்களா ?
உங்களுக்கும் பிள்ளை குட்டிகள் எல்லாம் இருக்குல்ல என கேட்டு அதிரடி காட்டினார். ஆனால் ரஞ்சனா மட்டும் அந்த பேருந்தை தடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்த பேருந்தில் இருந்து யாராவது மாணவர்கள் கீழே விழுந்து காயமோ உயிரிழப்போ ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் இவரது அதிரடி காட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
பேருந்தில் மிகவும் ஆபத்தான நிலையில் தொங்கிகொண்டு வந்த மாணவர்களை நடத்துனர் மற்றும் ஓட்டுநர் கண்டுக்காமலும் அதை தட்டி கேட்காமலும் அவர்களுக்கு என்ன ஆனால் என்ன ? என்று மெத்தனமாக இருந்த பொழுது தனி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக,ஒரு சகோதரியாக இந்த அக்கிரமத்தை தட்டி கேட்ட ரஞ்சனா நாச்சியாரை கைது செய்தது நியாயமில்லை என பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறினர்.