மோடியை தோற்கடிக்க வாங்க ஹிந்துக்களிடம் வேண்டுகோள் வைத்த காங்கிரஸ் மூத்த தலைவரின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ அமைச்சருமாக இருந்தவர் ஏ.கே. ஆண்டனி. இவர், காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாரதப் பிரமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றால் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பங்களிப்பு மட்டும் நமக்கு போதாது. பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களின் ஆதரவும் வேண்டும் என கூறியுள்ளார்.
இதனிடையே, தனது எல்லையை பலப்படுத்தும் விதமாக, அனைத்து காலத்திற்கும் ஏற்ற வகையில் இந்திய – சீன எல்லை அருகே சீனா வேகமாக சாலை பணிகளை மேற்கொண்டன. சீனாவை போன்று இந்திய எல்லைகளையும் நாம் பலப்படுத்த வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன.
எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, நாடாளுமன்றத்தில் அப்போதைய ராணுவ அமைச்சரான ஏ.கே. ஆண்டனி இவ்வாறு கூறினார் ; வளர்ச்சியடைந்த எல்லைகளை விட வளராத எல்லைகளே பாதுகாப்பானது. எல்லையை விரிவாக்கம் செய்வது சிறந்த பாதுகாப்பு அல்ல என்று சீனாவிற்கு முட்டு கொடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
ராகுல் ஜோக்கரை நம்பினால் காங்கிரஸ் என்றும் ஆட்சிக்கு வரமுடியாது என்று ஏ.கே. ஆண்டனி நினைத்து இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.