கல்வி ஆலோசகர்கள், கல்வி நிபுணர்களின், ஆலோசனையை பெற்று மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்விற்கு ஆதரவாக இருக்கும் சமயத்தில். தமிழகம் மட்டுமே நீட் தேர்விற்கு இன்று வரை கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வில் உள்ள சாதக, பாதகங்கள், குறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை அண்மையில் தி.மு.க அரசு நியமனம் செய்து இருந்தது.
இதனை தொடர்ந்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதில் பல்வேறு குளறுபடிதகள், குழப்பங்கள், சந்தேகங்கள் , உள்ளதாக பல சமூக ஆர்வலர்கள் முதல் அரசியல் விமர்சகர்கள் வரை பலர் தங்களின் கருத்துக்களை நீட் அறிக்கைக்கு எதிராக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.