சகோதரருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ததால், தலாக் கூறி விவாகரத்து செய்த இஸ்லாமியர் !

சகோதரருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ததால், தலாக் கூறி விவாகரத்து செய்த இஸ்லாமியர் !

Share it if you like it

தனது சகோதரருக்கு சிறுநீரக தானம் செய்த மனைவியை துபாயில் வேலை செய்யும் கணவர், வாட்ஸ்அப் தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், தனது கணவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ரஷீத். இவருக்குகும் பைரியாஹி கிராமத்தைச் சேர்ந்த தரன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து வேலை நிமித்தமாக துபாய் சென்ற ரஷீத் அங்கு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. எனினும், குடும்பசூழல் காரணமாக தரன்னும், தனது கணவரின் வீட்டிலேயே மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டு சில மாதங்களுக்கு பிறகு தரன்னும், மீண்டும் மாமியார்
வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போதுதான், தரன் உடல் நிலை சரியில்லாத தனது சகோதரருக்கு தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்தது பற்றி கணவர் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால், அந்த பெண்ணிடம் மாமியார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை வெளிநாட்டில் உள்ள தனது மகனுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.சிறுநீரகத்தை தானமாக வழங்கியதற்கு இழப்பீடாக குடும்பத்திடம் 10 லட்சம் வாங்கி வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்த ரஷீத், மனைவி மறுப்பு தெரிவிக்கவே, ஆவேசமடைந்துள்ளார்.
மனைவியிடம் போன் பேசிக்கொண்டிருந்த ரஷீதி திடீரென அழைப்பை துண்டித்து விட்டு, வாட்ஸ்அப் பில் மூன்று முறை தலாக் அனுப்பி, மனைவியை விவாகரத்து செய்வதாகக் கூறியுள்ளார். இதனால், அதிர்ந்துபோன அந்தபெண், கணவரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை. கணவர் வீட்டில் இருந்து தரன்னும் துரத்தி அடிக்கபட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில், முத்தலாக் தடைச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டுஅமலுக்கு வந்தது. அதன்படி, மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்டவிரோத குற்றமாகும். இந்த புகாரின் பேரில் கைதானால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். முத்தலாக் சட்டம் அமலான பிறகும் கூட தலாக் கூறி விவாகரத்து செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அண்மையில், திருமண நிகழ்சிக்கு செல்ல அழகு நிலையம் சென்று புருவமுடிகனை திருத்திய மனைவியை சவூதி அரேபியாவில் வேலை செய்யும் கணவர் போனில் தலாக் கூறி விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it