மும்பையைச் சேர்ந்த ஷபனம் ஷைத் என்ற இளம் முஸ்லிம் பெண், மும்பையிலிருந்து அயோத்திக்கு பாதயாத்திரை பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது தோழர்களான ராமன் ராஜ் சர்மா மற்றும் வினீத் பாண்டே ஆகியோருடன், ஷபனம் ஷைத்1,425 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்க புறப்பட்டார்.
பிறப்பில் இஸ்லாமியர் என்ற போதும், தீவிர ராமபக்தையாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். பெரிதாக எந்த திட்டமிடலும் இல்லாது மும்பையிலிருந்து அயோத்தி நோக்கி பாதயாத்திரையாக கிளம்பிவிட்டார் ஷபனம் . சாதி மத வேறுபாடுகளை கடந்து, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்” என்று தெரிவித்த ஷப்னம், இதுபோன்ற கடினமான ஆன்மிக யாத்திரைகளை ஆண்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற கருத்தையும் உடைத்திருப்பதாக பெருமை கொள்கிறார்.
தினமும் 25 – 30 கிமீ நடக்கும் இவர்கள் தற்போது, மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்தவாவை அடைந்துள்ளனர். மூவரும் சமூக ஊடகங்களின் பிரபலங்களாக மாறியதில், செல்லும் ஊர்களில் எல்லாம் பொதுமக்கள் சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். நீண்ட யாத்திரையால் களைப்பு வந்தாலும், ராமர் மீதுள்ள பக்தி தங்களை தொடர்ந்து செலுத்துவதாக மூவரும் தெரிவிக்கின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
காவிக்கொடியை ஏந்தியபடி அவர் முன்னோக்கிச் செல்லும்போது, முஸ்லிம்கள் உட்பட பலர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று வாழ்த்தியதன் மூலம் ஒற்றுமையின் இதயத் துடிப்பான தருணங்களை அனுபவித்ததாக ஷப்னம் கூறுகிறார். அயோத்திக்கு வருவதற்கு உறுதியான தேதி எதுவுமில்லை என்று ஷப்னம் தெளிவுபடுத்துகிறார், தனது பயணம் ஆன்மீக நிறைவுக்கான தனிப்பட்ட தேடலாகவும், மத எல்லைகளைத் தாண்டிய பக்தியின் உள்ளடக்கிய தன்மைக்கு சான்று எனத் வலியுறுத்துகிறார். ஷப்னத்தின் பயணம் ஒற்றுமையின் அடையாளமாக நிற்கிறது, தடைகளை உடைத்து, அன்புக்கும் பக்திக்கும் எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கிறது.
https://www.facebook.com/reel/3561048784144001