கபாலீஸ்வரர் கோயில் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தென்னிந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது .
இந்நிலையில் நேற்று இரவு, கிழக்கு மாட வீதி வாயிலில் நள்ளிரவு முதல் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். திடீரென அவர் கையில் வைத்திருந்த பாட்டிலில் உள்ள பெட்ரோலை கோவில் வாசலில் ஊற்றி தீவைத்தார். பிறகு, சிறிது சிறிதாக பெட்ரோலை தீயில் ஊற்றினார். கோவில் அருகே வசித்தவர்கள், இதனை பார்த்து அச்சம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நபர், மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது போதையில் அவ்வாறு செய்தாரா என விசாரணை நடக்கிறது.