பால் உற்பத்தியாளர்களுக்கு, பெடரல் வங்கி வாயிலாக, கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தரும் புதிய திட்டத்தை, பால்வளத்துறை துவங்கி உள்ளது. இதற்காக ஆவின் மற்றும் பெடரல் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இதில், பயனாளிகள் 10 பேருக்கு கறவை மாட்டு கடன்கள் வழங்குவதற்கான ஆணைகளை, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின், அவர் கூறியதாவது:
மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், விவசாயம் சார்ந்த உற்பத்தியின் பங்களிப்பை பெருக்கும் வகையில், கறவை மாடுகள் வாங்க, கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரண்டு மாதங்களில், 210 கோடி ரூபாய் அளவிற்கு கறவை மாடுகள் வாங்க, கடன் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, ஆவின் நிறு வனம் மற்றும் பெடரல் வங்கி இணைந்து, புதிய கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதன்படி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் தொகையில், 1 சதவீதம் ஊக்கத் தொகையாக
வழங்கப்படும்.” இது, 10,000த்துக்கும் மேற்பட்ட சங்கங்கள், பொருளாதார தன்னிறைவு அடைய வகை செய்யும். தொடக்க பால் உற்பத் தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, இதுவரை 1.69 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. தகுதியுடைய அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.