சாது மிரண்டால் காடு கொள்ளாது: ஆ.ராசாவை தூர்வாரிய இந்து முன்னணி!

சாது மிரண்டால் காடு கொள்ளாது: ஆ.ராசாவை தூர்வாரிய இந்து முன்னணி!

Share it if you like it

தி.மு.க. எம்.பி. ஆ. ராசாவை ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் வெளுத்து வாங்கிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திராவிடர் கழக தலைவராக இருப்பவர் வீரமணி. இவருக்கு, சமீபத்தில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வி.சி.க. தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, பேசிய ஆ. ராசா, நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசி இருந்தார்.

ஆபாச பேச்சாளர் ஆ.ராசாவின் கருத்து, ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆ. ராசாவிற்கு கடும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஆ. ராசாவை வெளுத்து வாங்கிய காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it