இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதியில் இஸ்லாமியருக்கு எதிராக போட்டியிட்ட காரணத்தால். போட்டியிட்ட நபர் அவரின் சொந்த ஊரில் வாழ முடியாத நிலைமை பாரத நாட்டில் ஏற்பட்டுள்ளது என்று இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் கொடுங்கோல் ஆட்சியில் இந்துக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மேற்குவங்கத்தில் பர்கானா மாவட்டத்தில் உள்ள சந்தோஷ் காளியில் இந்துக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அந்த மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் இஸ்லாமியர்கள் உள்ளதால் இந்துக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்த வண்ணம் உள்ளனர். சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. இந்துக் கோவில்கள் இடிக்கப்படுகின்றன. இந்து பெண்கள் மானபங்கம் படுத்தப்படுகின்றனர். இதை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் ஷாஜகான் ஷேக் என்பவன் தலைமையில் இஸ்லாமியர்கள் கூட்டாக சேர்ந்து இந்துக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியும் மிரட்டியும் இந்துக்களின் நிலத்தை அபகரித்து திட்டமிட்டு மிகப்பெரிய கலவரத்தை செய்தனர்.
மேலும் ரேகா பத்ரா என்ற பெண்ணின் நிலத்தை அபகரித்து அந்த பெண்ணை கூட்டு வன்கொடுமை பலாத்காரம் செய்தனர்.
இந்த செயலில் ஈடுபட்ட ஷாஜகான் சேக் என்பவன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் என்பதால் மேற்குவங்க முதலமைச்சர் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த பிரச்சனை பாரத நாடு முழுவதும் எதிரொலித்தது பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் நீதிமன்றத்தின் மூலமாக மேற்குவங்க அரசுக்கு கண்டனக் குரல் வந்ததால் தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக் என்பவனை இரண்டு மாத காலங்களுக்கு பிறகு மம்தா அரசு கைது செய்தது.
பின்பு பாராளுமன்ற தேர்தலின்போது சந்தோஷ் காளி கலவரத்தால் பாதிக்கப்பட்ட ரேகாபத்ரா என்ற பெண்ணை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் பாசீர்ஹாத் தொகுதியில் போட்டியாளராக நிறுத்தப்பட்டார்.
கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது பாசீர்ஹாத் தொகுதியில் ரேகா பத்ரா தோற்கடிக்கப்பட்டார்.
இது பற்றி ரேகாபத்ராவின் மாமியார் அனுபமா கூறுகையில் இந்தப் பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போதே இங்கே இஸ்லாமியர்கள் வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் எங்கள் வீட்டு அருகே வந்து எங்களை அச்சமூட்டும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் திட்டமிட்டு கலவரத்தை தூண்டும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் நாங்கள் இங்கு வாழ்வது கடினம் என்றும், எங்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது என்றும் நாங்கள் எங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற போவதாகவும். தெரிவித்துள்ளார்.
எங்கெல்லாம் இந்துக்களின் ஜனத்தொகை குறைந்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை அதிகமாகிறதோ அங்கெல்லாம் இந்துக்கள் மூன்றாந்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் அவர்கள் காலம் காலமாக சொல்லி வந்தது இன்று மேற்குவங்கத்தில் நடைபெற்றுக் உண்மையாகி உள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதியில் இஸ்லாமியருக்கு எதிராக போட்டியிட்ட காரணத்தால். போட்டியிட்ட நபர் அவரின் சொந்த ஊரில் வாழ முடியாத நிலைமை பாரத நாட்டில் ஏற்பட்டுள்ளது, இது இந்துக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை ஆகும். ஆகவே மத்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கமும் பாரத நாட்டில் இந்துக்கள் எங்கெல்லாம் சிறுபான்மையினராக உள்ளனரோ அந்த பகுதியில் இந்துக்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்துக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.