பிரதமர் மோடி எழுதிய சிறுதானியங்கள் குறித்த பாடல் 2024ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுக்கு சிறந்த உலகளாவிய இசை செயல்திறன் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான பாடல் இந்திய-அமெரிக்க பாடகர் ஃபால்குனி ஷா மற்றும் அவரது கணவர் கௌரவ் ஷா ஆகியோரில் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுதானிய உணவை உலகப் பசிக்கு ஒரு தீர்வாக வலியுறுத்தும் நோக்கில் இந்தப் பாடலை பிரதமர் மோடி எழுதி இருக்கிறார். மூன்று முறை கிராமி விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இந்தப் பாடல் கிராம விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றால் ஏற்பட்டும் சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகளை இந்தப் பாடல் எடுத்துக்கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபை நடப்பு ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகள் மூலம் சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை முன்னெடுத்து வருகிறார். சிறுதானியங்கள் பற்றிய பாடல் கிராமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது சிறுதானியங்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.