சர்க்கரை பொங்கல் குறித்து அமைச்சர் ஏ.வ.வேலு பேசியிருக்கும் காணொளி பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு, கடந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்தன. இதில், பாதி பொருட்கள் தரமற்ற முறையில் இருந்தன. 21 பொருட்கள் வழங்குவதாக கூறி விட்டு, மீதி பொருட்கள் வழங்கபடவில்லை என்பதே நிதர்சனம்.
இந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு. பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ;
கரும்பை கொடுத்தால் கால் கொடுத்தீர்கள், முக்கா கொடுத்தீர்கள் என்று குற்றச்சாட்டு. வெல்லம் கொடுத்தால் உருகி வழிகிறது, கெட்டி தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு. முந்திரி பருப்பு கொடுத்தால் சின்னதா இருக்கு என்ற விமர்சனம். இதையெல்லாம், கருத்தில் கொண்ட முதல்வர் ஸ்டாலின், சர்க்கரை பொங்கலுக்கு தேவையான சர்க்கரை மற்றும் பச்சரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
எந்தெந்த பொருட்களை எல்லாம், கொடுக்கவில்லை என்று குறை காண்கிறீர்களோ அதையெல்லாம், மனதிலே நிறைவாக எடுத்துக் கொண்டு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கரும்பு, ஏலக்காய் அனைத்தையும் வாங்கி கொள்ளலாம். கூடுதலாக, ரூ. 1000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேற்கூறிய, பொருட்களை பெற்றுக் கொண்டு திராவிட மாடல் ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்ட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் வேண்டுகோளை தொடர்ந்து தி.மு.க.வையும் திராவிட மாடல் அரசையும் நெட்டிசன்கள் பசுமையாக வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.