அடங்கமறு, அத்துமீறு கோஷம்… ஆதி தமிழர் கட்சியினர் ஓட ஓட விரட்டியடிப்பு: வைரலாகும் வீடியோ!

அடங்கமறு, அத்துமீறு கோஷம்… ஆதி தமிழர் கட்சியினர் ஓட ஓட விரட்டியடிப்பு: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

சென்னையில் அடங்கமறுப்போம், அத்துமீறுவோம் என்று கோஷ்மிட்டபடியே வந்த ஆதி தமிழர் கட்சியினரை ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அருந்ததியர் சமுதாயத்தினரை வந்தேரிகள் என்று குறிப்பிட்டுப் பேசினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இது அச்சமூகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே, சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். மேலும், சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஆதி தமிழர் கட்சியினர் அறிவித்தனர்.

இந்த சூழலில், ஆதி தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சி அலுவலகம் அருகே கூடி சீமானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது, சுமார் 10-க்கும் மேற்பட்டோர் போலீஸாரின் தடுப்பையும் மீறி திடீரென நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால், நாம் தமிழர் கட்சியினருக்கும், ஆதி தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போதுதான் ஆதி தமிழர் கட்சியினரை ஓட ஓட விரட்டி அடித்திருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it