பா.ஜ.க தலைவர் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நிகழ்ந்த ட்விஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படத்திற்கு, வரிவிலக்கு அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வரிடம் பலர் கோரிக்கை வைத்து இருந்தனர். இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் வரிவிலக்கு வேண்டும் என்றால், யூ டியூப்பில் வெளியிடுங்கள் என்று நக்கலாக சட்டசபையில் பதில் அளித்து சிரித்து இருந்தார். முதல்வரின் இந்த கருத்தை கேட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பல கொடுமைகளை அனுபவித்த ஹிந்து பண்டிகள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, நாடு முழுவதிலுமிருந்து டெல்லி முதல்வருக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து, குஜராத் பா.ஜ.க இளைஞர் அணியை சேர்ந்தவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் உருவப்படத்தை கொளுத்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
அந்த வகையில், பா.ஜ.க இளைஞரணி தேசிய செயலாளர் மற்றும் பா.ஜ.க செய்தி தொடர்பாளருமான தஜிந்தர் பால் சிங் பக்கா. டெல்லி முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது பெற்றோருடன் டெல்லியில் வசித்து வந்த தஜிந்தரை பஞ்சாப் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே, தாஜிந்தர் பக்காவின் தந்தை ப்ரீத் பால் சிங் பக்கா டெல்லி காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து, டெல்லி காவல்துறை அவரது புகாரை உடனே பதிவு செய்து கொண்டது.
எப்.ஐ.ஆரில் கூறப்பட்டு இருப்பதாவது;
ஒரு குழுவினர் ஆயுதங்களை ஏந்தியபடி எங்களது வீட்டிற்குள் நுழைந்தனர். அப்பொழுது, தாஜிந்தர் பக்கா எங்கே என்று கேட்டார்கள், பதிலுக்கு நான் ( ப்ரீத் பால் ) கேள்வி எழுப்பிய பொழுது அவர்கள் என்னை அறைந்தனர். பின்னர் என் குடும்பத்தினரையும் தாக்கினர். எனது மகனை அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு தலைப்பாகை அணிய வேண்டும் என கேட்டார். அதற்குள், அவரை வெளியே இழுத்துச் சென்றதாகவும் தனது மகனின் உயிரைக் காப்பாற்றுமாறு அந்த எஃப்ஐஆரில் ப்ரீத் பால் சிங் பக்கா குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, தஜிந்தர் பால் சிங் பக்காவை பஞ்சாப் கொண்டு செல்லும் வழியில், ஹரியானா மாநில காவல்துறையினர் குருஷேத்திரத்தில் வைத்து பஞ்சாப் போலீசை மடக்கி பா.ஜ.க தலைவரை மீட்டுள்ளனர். இதையடுத்து, டெல்லி காவல்துறையினர் பஞ்சாப் காவல்துறையினர் மீது ஆள் கடத்தல் வழக்கை பதிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அதிரடி ட்விஸ்ட்க்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். போலீஸ் மீதே போலீஸ் போட்ட எப்.ஐ.ஆர் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் காவல்துறையினரால் தஜிந்தர் பால் சிங் பக்கா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு முன்பாக பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/https://mediyaan.com/kerala-media-reporter-amit-shah-has-been-fired/