அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ABVP) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.
நமது பாரத பண்பாட்டை போதித்து மாணவர்களிடையே தலைமை பண்பு ஏற்படுத்திட பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் அகில பாரத அளவில் மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ABVP-யின் 70வது அகில பாரத மாநாடானது உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 22-11-2024 முதல் 24-11-2024 வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் நாட்டிலுள்ள கல்வி பிரச்சனைகள், விவாதங்கள், முக்கிய தீர்மானங்கள், சேவை பணிகளில் சிறந்து விளங்கியதற்காக இளம் சாதனையாளர் விருது ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மாநாட்டில் தமிழகத்தின் முக்கியமான கல்வி பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து 15 மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பின் இந்த ஆண்டிற்கான அகில பாரத தலைவர் மற்றும் அகில பாரத பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அகில பாரத தலைவராக போரசிரியர் ராஜ்சரண் ஷாஹி (லக்னோ) அவர்களும் அகில பாரத பொதுச்செயலாளராக Dr. வீரேந்திர சிங் சோலங்கி (இந்தூர்) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அகில பாரத மாநாட்டிற்கான சுவரொட்டி வெளியீடு நிகழ்ச்சியானது நவம்பர் 7 அன்று மாலை 5 மணியளவில் ABVP அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.