சென்னையில் நேற்று நடைபெற்ற நீட் போராட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நான் படிக்கின்ற காலத்தில் ஊரில் ஒருவர் தான் பி.ஏ பட்டம் வாங்க முடிந்தது. ஆனால் இன்றைக்கு நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. அதற்கு காரணம் திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பட்டதாரிகளை மிகவும் கொச்சைப்படுத்தி பேசினார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில்
ஏபிவிபி அமைப்பு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
நீட் விலக்கு போராட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பி ஏ படிப்பு இன்று தமிழகத்தில் நாய்கள் கூட பிஏ பட்டத்தை பெறுகிறது. என்று BA இளங்கலை படிப்பை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இது முதல் தலைமுறையாக பட்டம் பெற வேண்டும் என்று படித்து வரும் மாணவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. என்று கூறிய வார்த்தைக்கு மாணவர்களிடம் R.S பாரதி மன்னிப்பு கூற வேண்டுமென்று ABVP தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. பேராசிரியர்களுக்கான நுழைவுத் தேர்வாகிய SET தேர்வை நடத்துவதற்கு கூட தகுதியற்ற மற்றும் உயர்கல்வி துறையை சீரழித்து திராவிட சித்தாந்தங்களை புகுத்தி மாணவர்களை தவறான வழியில் வழி நடத்திச் செல்லும் திமுக அரசின் அமைப்பு செயலாளர் இளங்கலை பட்டத்தை நாய்கள் கூட பெறுகிறது. இந்த செய்தி மாநில இணைச் செயலாளர் திரு நெல்லை சூர்யா அவர்களால் வெளியிடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.