மாணவர்களிடையே சமூக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் பாரத தேசத்தை பிரிக்கும் சித்தாந்தங்களை போதிக்கும் வகையில் இருக்கும் தனிநபர் ஆணையத்தின் அறிக்கையை ABVP வன்மையாக நிராகரித்து கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில இணைச் செயலாளர் திரு.நெல்லை சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் தலைமையிலான சாதிய வேறுபாடுகள் களைய ஒரு நபர் ஆணையம் அறிக்கையில் கையில் கயிறு கட்டக் கூடாது நெற்றியில் திலகம் இடக்கூடாது போன்ற குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த மாணவர்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று அமைக்கப்பட்ட தனிநபர் ஆணையம் ஆனது. ஜாதியை பார்த்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஒரு கேலிக்கூத்தான செயலாக காணப்படுகிறது.
மாணவர்களை நல்வழிப்படுத்தவும் சமூக சேவையில் ஈடுபடுத்தவும் NSS, NCC போன்ற தேசிய அளவிலான அமைப்புகள் உள்ளன. ஆனால், இந்த தனிநபர் ஆணையமும் SJSF இந்த அமைப்பை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இது திராவிட சித்தாந்தத்தையும் கம்யூனிச சித்தாந்தத்தையும் விதைத்து மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக காணப்படுகிறது.
அறநெறி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் அல்லாமல் வெளிநபர்களும் வந்து கற்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரிவினை சக்திகளும் மதமாற்றும் கும்பலும் மாணவர்களிடையே தேசத்திற்கு எதிரான செயலை விதைப்பதற்கான சூழலை ஏற்படுத்தும் வீதமாக உள்ளது.
இதுபோல மாணவர்களின் நம்பிக்கைக்கும் சமூக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் பாரத தேசத்தை பிரிக்கும் சித்தாந்தங்களை போதிக்கும் வகையில் இருக்கும். இந்த தனிநபர் ஆணையத்தின் அறிக்கையை ABVP வன்மையாக நிராகரிக்கிறது மற்றும் கண்டிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Yes. This is true 👍