விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் –  அண்ணாமலை

விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் – அண்ணாமலை

Share it if you like it

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பூரில் தொடங்கி கோவை மேட்டுப்பாளையத்தில் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை ,மேற்கொண்டு வருகிறார். நடைப்பயணத்தில் மக்களின் நிறை குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் காரமடை செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் அண்ணாமலையிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான உதகையின் நுழைவு வாயிலாக இருப்பது மேட்டுப்பாளையம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பவானி ஆறு சமவெளியை அடைந்து மேட்டுப்பாளையம் வழியாகவே ஈரோடு மாவட்டத்துக்குச் செல்கிறது. பவானி ஆற்றின் கொடையால் வேளாண்மை இங்கு முக்கிய தொழிலாக நடைபெறுகிறது. விவசாய தொழிலுக்கு அடுத்த படியாக கைத்தறி நெசவுத் தொழிலை அதிகம் பேர் செய்து வருகின்றனர். கொங்கு பகுதியின் காஞ்சிபுரம் என்ற பெருமை கொண்டது சிறுமுகை. 5000 நெசவாளர்கள் உள்ள பகுதி இந்த சிறுமுகை. பட்டு புடவைகளுக்கு பெயர் போன ஊர். சிறுமுகை பட்டுக்கு தமிழகம், இந்தியா, வெளிநாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது

தமிழ்நாட்டில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டுள்ள மொத்தமுள்ள 2,540 ஹெக்டேர் பரப்பளவில், இந்தப் பகுதியில் உள்ள காரமடை வட்டாரத்தில் மட்டும் 1240 ஹெக்டேர் கறிவேப்பிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. காரமடை செங்காம்பு கறிவேப்பிலைக்கு தனி மகத்துவம் உண்டு.மனித உடலுக்கு தேவையான பல சத்துக்கள் மட்டுமின்றி இதன் சுவையும் மணமும் அதிகம். இதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, தமிழக பாஜக முன்னெடுத்து செல்லும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளபக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it